/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலியில் கவர்னர்இன்று புத்தக வெளியீட்டில் பங்கேற்பு
/
திருநெல்வேலியில் கவர்னர்இன்று புத்தக வெளியீட்டில் பங்கேற்பு
திருநெல்வேலியில் கவர்னர்இன்று புத்தக வெளியீட்டில் பங்கேற்பு
திருநெல்வேலியில் கவர்னர்இன்று புத்தக வெளியீட்டில் பங்கேற்பு
ADDED : பிப் 28, 2025 01:12 AM

திருநெல்வேலி:கவர்னர் ஆர்.என்.ரவி திருநெல்வேலி வந்தார். இன்று ஸ்ரீவைகுண்டர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக திருநெல்வேலி வந்துள்ளார். நேற்று மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் மாலையில் திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதார பதிக்கு சென்று தரிசனம் செய்தார். பின் கார் மூலம் திருநெல்வேலி வந்தார். கலெக்டர் சுகுமார், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா அவரை வரவேற்றனர்.
கே.டி.சி.நகர் காப்பர் லீப் ஓட்டலில் வணிகர்கள் மற்றும் ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகளிடம் பேசினார். நேற்றிரவு வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இன்று காலை நாகர்கோவில் சாலை செங்குளம் அழகு மஹாலில் அய்யா வைகுண்டர் அவதார திருநாள் விழாவில் பங்கேற்று ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் என்ற நூலை தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்.
தொடர்ந்து மகராசி மகாலில் நடக்கும் நிகழ்வில் மதன் மோகன் மாளவியா பள்ளி மாணவ மாணவிகள் உடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். பின் தூத்துக்குடி விமான நிலையம் சென்று சென்னை புறப்படுகிறார்.