/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்
/
கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்
ADDED : ஜூலை 09, 2024 08:41 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் இரண்டு அணு உலைகள் தலா, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொண்டு வருகின்றன. இதில், இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக மே 13ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று முன்தினம் பகலில் மின் உற்பத்தி துவங்கியது.
இதில், 300 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி நடந்தது. இந்நிலையில், நேற்று காலை திடீர் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எனவே பழுது பார்க்கும் பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இந்த அணுமின் வளாகத்தில் மேலும் 4 அணு உலைகளுக்கான பணி நடந்து வருகிறது.