/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கோர்ட் வளாகத்தில் பேட்டரி திருடிய வழக்கறிஞர் கைது
/
கோர்ட் வளாகத்தில் பேட்டரி திருடிய வழக்கறிஞர் கைது
கோர்ட் வளாகத்தில் பேட்டரி திருடிய வழக்கறிஞர் கைது
கோர்ட் வளாகத்தில் பேட்டரி திருடிய வழக்கறிஞர் கைது
ADDED : ஆக 20, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜெனரேட்டர் உள்ளது. சில தினங்களுக்கு முன், அந்த ஜெனரேட்டரை இயக்கிய போது இயங்கவில்லை. அதிலிருந்த பேட்டரி திருடு போயிருந்தது. நீதிமன்ற ஊழியர் புகாரில் வள்ளியூர் போலீசார் விசாரித்தனர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வழக்கறிஞராக உள்ள முருகன், 56, அவரது வாடிக்கையாளரான ஏர்வாடி ஆதிநாராயணன் ஆகியோர் சேர்ந்து பேட்டரியை திருடி பழைய பொருட்கள் கடையில் விற்றது தெரிந்தது.
போலீசார், இருவரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.