நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி -- சங்கரன்கோவில் சாலையில் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மீது தேவர்குளம் போலீசார் வேண்டுமென்றே வழக்குகள் போடுவதாக புகார் கூறி நேற்று முன்தினம் வன்னிகோனேந்தலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 34 பேரை கைது செய்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து நேற்று தேவர்குளம், வன்னிகோனேந்தல், குருக்கள்பட்டி, பணவடலிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.