/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஊராட்சி அலுவலகத்தில் 1 பவுன், ரூ.85,000 திருட்டு
/
ஊராட்சி அலுவலகத்தில் 1 பவுன், ரூ.85,000 திருட்டு
ADDED : நவ 14, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வலசையூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனுார் ஊராட்சி அலுவலகத்தில், ராமர் கார்டனை சேர்ந்த சோபியா, 36, செயலராக உள்ளார். அவர் நேற்று முன்தினம் பணிகளை முடித்துவிட்டு, அலுவலகத்தை பூட்டிச்சென்றார்.
நேற்று காலை அலுவலகத்துக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, ஒரு பவுன் சங்கிலி, 80,000 ரூபாய், இரு ஏ.டி.எம்., கார்டுகள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

