ADDED : ஜூலை 26, 2026 11:22 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, மகாதேவன்குளம் நரிஊத்து நாலுகால் மண்டபம் கோவிலில், ஆடி திருவிழா நடந்தது. அப்போது, அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் சங்கரை கருப்பசாமி, 30, என்பவர் தாக்கிவிட்டு தப்பியோடினார். அவரை, போலீசார் கைது செய்தனர்.
இதில் ஆத்திரமடைந்த மகாதேவன்குளத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, 25, தன் கூட்டாளிகளுடன் திசையன்விளை மற்றும் இட்டமொழியில் உள்ள, 2 பெட்ரோல் பங்க் டீசல் பம்புகளை அரிவாளால் சேதப்படுத்தி, அப்பகுதியில் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
இதில், பேச்சிராஜா, 18, மற்றும், 17 வயது வாலிபர், முத்துடையார், 26, ஆகியோரை போலீசார் கைது செய்து, இசக்கிராஜா உட்பட, மூவரை தேடுகின்றனர்.
