தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு

1


ADDED : ஜூலை 28, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 01:43 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெ: ல்வேலி: தி ரு நெ ல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பட்டங்களை வழங்குகிறார்.

மத்திய உள்துறை அமைச்சக சமீபத் திய வழிகாட்டுதலின்படி, அரசு நிகழ்வுகளில் முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், நிறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் .

பல்கலை பட்டமளிப்பு விழாவிலும், இந்நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என, துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் இப்பல்கலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக தான் இசைக்கப்படும் என, துணைவேந்தர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடையநல்லுார் ம.தி.மு.க., -- எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழை திருப்பி அனுப்பி, விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி காங்., -- எம்.பி., ராபர்ட் புரூஸ், தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். வக்கீல்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, பல்கலை வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முனைவர் பட்டம் பெ றும் தமிழக டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், மும்பை போலீஸ் துணை கமிஷனர் ராதா சுதா, நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் திரிவேணி உள்ளிட்டோருக்கு, உடல்நிலை காரணமாக, கவர்னர் நேரடியாக பட்டம் வழங்கவில்லை.

பட்டம் பெறுபவர்கள், விழாவில் பங்கேற்று, உறுதிமொழி மட்டும் ஏற்க உள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெ ரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us