UPDATED : நவ 06, 2026 11:50 PM
ADDED : நவ 06, 2026 11:48 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பாத்திமா நகரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், 29. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார்.
