/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவியிடம் சில்மிஷம் ஆட்டோ டிரைவர் கைது
/
மாணவியிடம் சில்மிஷம் ஆட்டோ டிரைவர் கைது
ADDED : மார் 16, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லுார் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 31 ; அப்பகுதியில் மாணவ, மாணவிகளை பள்ளிகள், டியூஷன் மையங்களுக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்வார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி டியூஷனுக்குச் சென்று ஆட்டோவில் வீடு திரும்பும் வழியில் அவரிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவி உறவினர்கள் ராஜ்குமாரை தாக்கி அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தினர். இதில் தச்சநல்லுார் போலீசார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் ராஜ்குமாரை, டவுன் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.