sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வாகனங்களில் "பாதுகாப்பற்ற' பயணம் நெல்லை போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா

/

வாகனங்களில் "பாதுகாப்பற்ற' பயணம் நெல்லை போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா

வாகனங்களில் "பாதுகாப்பற்ற' பயணம் நெல்லை போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா

வாகனங்களில் "பாதுகாப்பற்ற' பயணம் நெல்லை போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா


ADDED : ஆக 08, 2011 03:48 AM

Google News

ADDED : ஆக 08, 2011 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : நெல்லையில் 'ஓவர்லோடு' வாகனங்களில் ஆபத்து விளைவிக்கும் பயணங்களுக்கு போலீசார் தடை விதிக்க வேண்டும்.நெல்லையில் வாகனப்போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜங்ஷன் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பாளை. பஸ்ஸ்டாண்ட், சமாதானபுரம் வரை ரோடுகள் காலை, மாலையில் பீக்அவர்ஸ் நேரங்களில் வாகனங்களின் ஆதிக்கத்தால் திணறுகிறது.நெல்லை ஜங்ஷன், டவுன், பாளை. பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் பைக்குகளை இயக்குபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்கள், மது குடித்துவிட்டு பைக் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.எனினும் 'ஓவர்லோடு' ஏற்றிச்செல்லும் வாகன டிரைவர்கள் போலீஸ் நடவடிக்கைளில் சிக்குவதில்லை. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரின் பல்வேறு ரோடுகளில் ஓவர்லோடு ஆட்டோக்கள், லோடு ஆட்டோக்கள், இதர வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகின்றன.கொக்கிரக்குளம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மதியம் ஒரு 'ஓவர்லோடு' ஆட்டோ சென்றது. ஆட்டோவில் இருந்த லோடு மீது இருவர் பாதுகாப்பற்ற முறையில் அமர்ந்திருந்தனர். 'கீழே விழுந்தால்... அதோ கதிதான்' என்ற அபாயத்தை உணராமல் அவர்கள் பயணம் செய்தனர்.நெல்லையில் இதுபோன்ற 'பாதுகாப்பற்ற' பயணங்களுக்கு போலீசார் தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாகன டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us