/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது
/
நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது
ADDED : நவ 04, 2025 02:07 AM
திருநெல்வேலி: குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 47. டிரைவர். திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி அருகே இட்டேரியில் வசித்து வந்தார்.
அதேபோல், செல்வம், 41, என்பவரும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர்; தற்போது திருநெல்வேலி, என்.ஜி.ஓ., காலனி, மகிழ்ச்சி நகரில் வசித்து வந்தார்.
இருவரும் நேற்று இரவு, திருமால் நகர் டாஸ்மாக் கடை அருகே இறைச்சிக்கடையில் அமர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த செல்வம், கறி வெட்டும் கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை குத்தியதில், உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.

