UPDATED : செப் 22, 2024 12:36 PM
ADDED : செப் 22, 2024 12:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: நெல்லை அருகே ஜமீன்சிங்கப்பட்டி, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாங்குளம், அம்பாசமுத்திரம், மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், இதனை மறுத்துள்ள நிலநடுக்கத்திற்கான மையம், தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு பதிவாகவில்லை என தகவல் தெரிவித்துள்ளது.