நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க முடியாமல் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே இளங்குளத்தை சேர்ந்தவர் கண்ணன் 44. விவசாயி. நிலத்தை குத்தகைக்கு பெற்று 7 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார்.
ராமலட்சுமி 39, என்ற மனைவியும் 7 வயதில் சுரேஷ் என்ற மகனும் உள்ளனர். கடன் தொல்லையால் மே 25 ம் தேதி வாழைதோட்டத்தில் வைத்து விஷம் அருந்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். விஜயநாராயணம் போலீசார் விசாரிக்கின்றனர்.