/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய ஓட்டல் கேஷியருக்கு அடி உதை
/
பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய ஓட்டல் கேஷியருக்கு அடி உதை
பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய ஓட்டல் கேஷியருக்கு அடி உதை
பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய ஓட்டல் கேஷியருக்கு அடி உதை
ADDED : நவ 17, 2025 01:54 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓட்டலுக்கு வந்த பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய கேஷியருக்கு சரமாரி அடி உதை விழுந்தது.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள பிரபல உணவு விடுதிக்கு நேற்று முன்தினம் தந்தை, மகள் சென்றனர்.
ஓட்டல் கல்லாவில் இருந்த கேஷியர் சிவக்குமார், அந்தப் பெண் உணவருந்தி கொண்டிருந்தபோது பாலியல் ரீதியாக தவறான செய்கை செய்ததோடு கண்ணடித்துள்ளார்.
ஓட்டலில் இருந்து வெளியேறிய பிறகு இதனை அந்த பெண் தந்தையிடம் கூறினார்.
தந்தை, உறவினர் மீண்டும் கடைக்குள் வந்து கேஷியர் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
சம்பவம் குறித்து ஜங்ஷன் போலீசார் சிவக்குமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
சிவக்குமார் தரப்பிலும் புகார் அளிக்கப் பட்டது.