/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ராதாபுரம் சார் பதிவாளர் உட்பட 9 பேர் மீது நில மோசடி வழக்கு
/
ராதாபுரம் சார் பதிவாளர் உட்பட 9 பேர் மீது நில மோசடி வழக்கு
ராதாபுரம் சார் பதிவாளர் உட்பட 9 பேர் மீது நில மோசடி வழக்கு
ராதாபுரம் சார் பதிவாளர் உட்பட 9 பேர் மீது நில மோசடி வழக்கு
ADDED : நவ 17, 2025 01:54 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் 20 சென்ட் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், டாக்டர் உட்பட 9 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
ராதாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் 50. இவரது தந்தை சுப்பையா மற்றும் கல்யாணி ஆகியோருக்கு கூட்டாக பாத்தியப்பட்ட ராதாபுரம் பட்டர்குளத்தில் உள்ள நிலத்தை ஒருவருக்கு பவர் கொடுத்திருந்தனர்.
ஆனால் பணம் தந்து கிரையம் செய்யாமல் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார் ராதாபுரம் சார் பதிவாளர் முருகன், சுப்புலட்சுமி மருத்துவமனை டாக்டர் வேலாயுதம், திருவம்பலாபுரம் சுந்தரம், துலுக்கர்பட்டி ஷர்மிளா பேகம், பீர் பாத்து, செந்தில்வேல், இளைய நயினார்குளம் பரமசிவன், ராஜாமணி, ஐயப்பன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.