/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆற்றில் மூழ்கடித்து மனைவியை கொலை செய்த கணவர் 'சரண்'
/
ஆற்றில் மூழ்கடித்து மனைவியை கொலை செய்த கணவர் 'சரண்'
ஆற்றில் மூழ்கடித்து மனைவியை கொலை செய்த கணவர் 'சரண்'
ஆற்றில் மூழ்கடித்து மனைவியை கொலை செய்த கணவர் 'சரண்'
ADDED : ஆக 26, 2025 12:08 AM

திருநெல்வேலி:
அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கடித்து, மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பொத்தையை சேர்ந்தவர் செல்லையா, 31; டிரைவர். இவரது மனைவி காவேரி, 30. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
காவேரிக்கு மூன்றாவது பிரசவத்துக்கு பின், மனநலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் கணவருடன் அடிக்கடி தகராறு செய்தார். வெளியில் நின்று தன் ஆடைகளை கிழித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, காவேரி முக்கூடலில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம், அம்பாசமுத்திரம் வீட்டுக்கு, அவரை செல்லையா அழைத்து வந்தார். மாலையில் சின்னசங்கரன்கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அங்கு ஏற்பட்ட தகராறில், செல்லையா, காவேரியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். பின், அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். தீயணைப்பு துறையினர் காவேரியின் உடலை தேடி வருகின்றனர்.