ADDED : டிச 05, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: வீரவநல்லுார் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் 45. லோடு ஆட்டோ டிரைவர். முக்கூடலில் வசித்தார். நேற்று மாலையில் வீரவநல்லுாரில் இருந்து முக்கூடல் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அரிகேசவநல்லூர் பகுதியில் வழிமறித்த 4 பேர் கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என போலீசார் விசாரிக்கின்றனர்.