/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
/
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
ADDED : டிச 06, 2025 02:16 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது சாதிக் 28. இவர் சுத்தமல்லி-கோபாலசமுத்திரம் சாலையில் தனது வீட்டின் அருகே பரோட்டா கடை நடத்தி வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார்.
டிச. 2ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள், சாதிக் வீட்டின் மீது சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். மாடிக்கு செல்லும் படிச் சுவரில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுத்தமல்லி போலீசார் விசாரித்தனர். இதில் ஈடுபட்ட கீழத்தெடியூர் துரை என்ற லட்சுமணன் 21, என்பவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடுகின்றனர். குண்டு வீச்சுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது.

