/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை மாவட்ட காங்., தலைவர் எரித்துக் கொலை?
/
நெல்லை மாவட்ட காங்., தலைவர் எரித்துக் கொலை?
UPDATED : மே 04, 2024 04:41 PM
ADDED : மே 04, 2024 12:09 PM

திருநெல்வேலி: காணாமல் போனதாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் கே.பி.கே. ஜெயக்குமார். திசையன்விளை அருகே கரைசுற்றுப்புதூர் பகுதியில் அவரது வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா ஜாபிரின், உவரி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நிலத்தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, மற்றும் கட்சி கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்து வந்ததாக தெரிகிறது. கொலை மிரட்டல் வருவதாகவும் போலீசில் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில், வீடு அருகே உள்ள அவரது தோட்டத்தில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்தது யார்? என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார்.