sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நெல்லை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன்புஆதித்தமிழர் பேரவை "திடீர்' போராட்டம்

/

நெல்லை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன்புஆதித்தமிழர் பேரவை "திடீர்' போராட்டம்

நெல்லை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன்புஆதித்தமிழர் பேரவை "திடீர்' போராட்டம்

நெல்லை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன்புஆதித்தமிழர் பேரவை "திடீர்' போராட்டம்


ADDED : ஜூலை 23, 2011 02:40 AM

Google News

ADDED : ஜூலை 23, 2011 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:பஞ்., தலைவியை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை எஸ்.பி., அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் முற்றுகையிட்டனர்.நெல்லை அருகே தாழையூத்து பஞ்., தலைவியாக இருப்பவர் கிருஷ்ணவேணி.

இவரை கடந்த மாதம் 13ம்தேதி சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். படுகாயமடைந்த கிருஷ்ணவேணி பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். உடல்நலம் தேறிவரும் கிருஷ்ணவேணிக்கு பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.இதற்கிடையில், பஞ்., தலைவி கிருஷ்ணவேணியை கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்வது, சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் நெல்லை எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்டச்செயலாளர் கதிரவன், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் மனோகர், மாநகர செயலாளர் வேலாயுதம், தமிழரசன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இப்போராட்டத்தால் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பாளை. இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையில் போலீசார் போராட்டக்குழுவினரை சமாதானப்படுத்தினர். நிர்வாகிகள் எஸ்.பி., விஜயேந்திர பிதரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதியளித்தார். பின்னர் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us