தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ போக்சோ குற்றங்கள்

 போக்சோ குற்றங்கள்

 போக்சோ குற்றங்கள்


ADDED : ஆக 13, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் செய்யது பீர் முகமது, 30. பெயின்டர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும், 35 வயது பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. அந்த பெண்ணின், 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்த பீர் முகமது, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே, மலை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவி, நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் தாய் புகாரில், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஈரோடு: ஈரோடை சேர்ந்த, 17 வயது இளம்பெண், உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 1 படிக்கிறார். இவரை சில தினங்களுக்கு முன், 24 வயது வாலிபர் கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். இளம்பெண்ணின் உறவினர், ஈரோடு மகளிர் போலீசில் அளித்த புகாரில், போக்சோ, கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார், அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us