/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ராமநதி அணையில் உபரி நீர் வெளியேற்றம்
/
ராமநதி அணையில் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : டிச 14, 2024 02:49 AM
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம்கடனாநதி அணையில்பாதுகாப்பு கருதி, வரும் நீர்முழுவதும் வெளியேற்றப்பட்டது.
நீர் மட்டம், 84 அடி கொண்ட ராமநதி அணையில் இருந்து, 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரு அணைகளில் இருந்தும், 22,000 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில், 70,000 கன அடி தண்ணீர் செல்லும் நிலையில், தற்போது கூடுதலாக, 22,000 கன அடி நீர் ஆற்றில் சேர்கிறது.
கடனாநதி அணையில் திறக்கப்படும் உபரிநீரால் அணை அருகே உள்ள சம்பங்குளம் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
அப்பகுதியினர், அருகே உள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலர் வீடுகளிலேயே முடங்கினர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

