/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநங்கையர் விடிய விடிய போராட்டம்
/
திருநங்கையர் விடிய விடிய போராட்டம்
ADDED : ஆக 10, 2025 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே சூட்டுப்பொத்தை பகுதியில், 36 திருநங்கையருக்கு தலா, 2 சென்ட் நிலத்தை அரசு வழங்கியுள்ளது.
அந்த பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை வருவதால், அவர்களுக்கு வேறு இடத்தில் நிலம் தருவதாகவும், அங்கிருந்து காலி செய்யும்படியும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
நேற்று முன்தினம் திருநங்கையரின் தலைவி தாமரை, 32, என்பவரின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருநங்கையர் நேற்று முன்தினம் இரவு வள்ளியூர் அம்பேத்கர் சிலையில் இரவு முழுதும், நேற்று காலை வள்ளியூர் சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.