/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
'நாங்க பினாயிலே வாங்கல' நெல்லை மாநகராட்சி 'அலெர்ட்'
/
'நாங்க பினாயிலே வாங்கல' நெல்லை மாநகராட்சி 'அலெர்ட்'
'நாங்க பினாயிலே வாங்கல' நெல்லை மாநகராட்சி 'அலெர்ட்'
'நாங்க பினாயிலே வாங்கல' நெல்லை மாநகராட்சி 'அலெர்ட்'
ADDED : ஆக 10, 2025 01:33 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் நடந்த பினாயில் முறைகேடு விவகாரத்தால், கடந்த நிதியாண்டு முழுதும் மாநகராட்சி பினாயில் வாங்காமல் துாய்மை பணிகளை செய்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில், லட்சக்கணக்கான ரூபாய்க்கு பிளீச்சிங் பவுடர், பினாயில் வாங்கியதாக செலவு கணக்கு காட்டப்பட்டது.
இதில், 2021 -- 2022 கொரோனா காலகட்டத்தில், 84 லட்சம் ரூபாய்க்கு பிளீச்சிங் பவுடர், பினாயில் வாங்கியதாக அதிகாரிகள் கணக்கு எழுதினர்.
மேலும், 2022 - -2023ல் 54 லட்சம், 2023 -- 2024ல் 17 லட்சம் ரூபாய்க்கு பிளீச்சிங் பவுடர், பினாயில் வாங்கியதாக அப்போதைய நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தெரிவித்துள்ளார்.
அவர் விடுமுறையில் சென்ற போது, 2024 பிப்ரவரியில், 55 லட்சம் ரூபாய்க்கு பினாயில் வாங்கியதாக கணக்கு எழுதப்பட்டது.
விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு வந்த டாக்டர் சரோஜா, பில்லுக் குரிய பினாயில், ப்ளீச்சிங் பவுடர் இருப்பு இல்லாததால், பில்லில் கையெழுத்திட மறுத்தார்.
பினாயில் வாங்காமலேயே கூட்டுறவு பேரங்காடியில் பில் மட்டும் வாங்கி கணக்கு எழுத, அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
இந்த முறைகேடு தொடர்பாக, 2024ல் சில மாதங்கள் மட்டும் நகர் நல அலுவலராக இருந்த டாக்டர் ஆனி குயின் கடந்த ஜூலை 31ல் பணி ஓய்வு பெறும் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாநக ராட்சியின் பினாயில் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், கடந்த 2024 - 2025 நிதியாண்டில், எவ்வளவு பினாயில், பிளீச்சிங் பவுடர் வாங்கப்பட்டுள்ளது என, தகவல் உரிமை சட்டத்தில் கே ள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள தற்போதைய நகர் நல அலுவலர் டாக்டர் ராணி, '2024 - 25ல் பிளீச்சிங் பவுடர், பினாயிலே வாங்கவில்லை' என, தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த, 55 லட்சம் ரூபாய் பினாயில் முறைகேடில், இதுவரை பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.