/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தீயணைப்பு துணை இயக்குநர் ஆபீசில் இரவில் நடமாடியது யார்?
/
தீயணைப்பு துணை இயக்குநர் ஆபீசில் இரவில் நடமாடியது யார்?
தீயணைப்பு துணை இயக்குநர் ஆபீசில் இரவில் நடமாடியது யார்?
தீயணைப்பு துணை இயக்குநர் ஆபீசில் இரவில் நடமாடியது யார்?
ADDED : நவ 21, 2025 01:31 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், நள்ளிரவில் டூ - வீலரில் வந்து, மர்ம நபர் லஞ்ச பணத்தை கவர்களில் வைத்து செல்லும் சிசிடிவி பதிவு பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகம் என்.ஜி.ஓ., காலனியில் உள்ளது. துணை இயக்குநராக சரவணபாபு உள்ளார். நவ., 18ல் அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 2 லட்சத்து 24,100 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது டிரைவரிடமிருந்து, 27,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சரவணபாபு நேர்மையான அதிகாரி. அவர் மீது யாரோ உள்நோக்கத்தில் பணத்தை வைத்து சிக்க வைத்துள்ளனர் என்ற பேச்சு எழுந்தது. இதற்கிடையே, துணை இயக்குநர் அலுவலகத்தின் எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், சோதனை நடந்த நவ., 18 அதிகாலை, 12:10 மணிக்கு காக்கி பேன்ட், நீல நிற சட்டை அணிந்த ஒரு நபர் டூ - வீலரில் தீயணைப்பு அலுவலகம் முன் வந்து, டூ - வீலரை நிறுத்தி விட்டு, ஒரு பையை எடுக்கிறார்.
அதிலிருந்து சில கவர்கள் கீழே விழுகின்றன. பின், அந்த நபர் அந்த பையுடன் அலுவலகத்திற்குள் சென்று வைத்து விட்டு, 10 நிமிடங்களில் மீண்டும் வெளியேறி செல்கிறார். தீயணைப்பு படை வீரரை போல இருக்கும் அந்த நபர், அதிகாலையில் ஏன் அங்கு செல்ல வேண்டும். அவர் யார் என, போலீசார் விசாரித்தால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

