/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித் தேர் பணி மும்முரம்
/
நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித் தேர் பணி மும்முரம்
ADDED : பிப் 06, 2025 02:39 AM

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித்தேர் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் 33 ஆண்டுகளுக்கு முன் வெள்ளித்தேர் தீக்கிரையானது.
அதன் பிறகு தற்போது பக்தர்கள் முயற்சியில் மீண்டும் வெள்ளித்தேர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தேக்கு மரத்தில் தேர் உருவாகிவிட்டது. அதில் இரண்டு குதிரைகள், பிரம்மன் மற்றும் ஆகம விதிகளின்படி மரச்சிற்பங்களில் வெள்ளி தகடுகளால் வேயப்பட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியினை சில மாதங்களுக்கு முன் நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா துவக்கி வைத்தார்.
பணியினை மதுரை கல்யாணசுந்தரம் ஸ்தபதி குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 16 அடி உயரத்தில் 450 கிலோ வெள்ளி பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. தேருக்கு ஏற்கனவே நன்கொடையாளர்கள் ராஜரத்தினம், சபாபதி 100 கிலோ வெள்ளி வழங்கியுள்ளனர்.
இன்னும் போதுமான வெள்ளி கிடைக்கவில்லை. நன்கொடையாளர்கள், பக்தர்களிடம் நன்கொடை கேட்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளியாகவோ, நிதியாகவோ வழங்கும்படி கோயில் அறங்காவலர் குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.