ADDED : ஆக 09, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கூடல்வாடியைச் சேர்ந்தவர் உதயகுமார், 39. ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை கூடல்வாடி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த கார்மீது ஆட்டோ உரசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உதயகுமாரை திருவாலங்காடு காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதனால் விரக்தி அடைந்த உதயகுமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட போலீசார் திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.