/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கரில் ரோப்கார் சேவை 2 நாட்கள் ரத்து
/
சோளிங்கரில் ரோப்கார் சேவை 2 நாட்கள் ரத்து
ADDED : ஏப் 05, 2024 09:58 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் மலைக்கோவில். பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது யோக அனுமன் மலைக்கோவில்.
பெரிய மலைக்கு, 1,305 படிகள் வழியாக பக்தர்கள் நடந்து சென்று சுவாமியை வழிபட்டு வருகின்றனர். கடந்த 2010ல், பக்தர்கள் பங்களிப்புடன், பெரிய மலைக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த மாதம் 8 ல் ரோப்கார் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக, ரோப்கார் சேவை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இன்று, நாளை என இரண்டு நாட்களுக்கு, ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை, சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

