/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் 12,000 பக்தர்கள் தீமிதிப்பு
/
திரவுபதியம்மன் கோவிலில் 12,000 பக்தர்கள் தீமிதிப்பு
திரவுபதியம்மன் கோவிலில் 12,000 பக்தர்கள் தீமிதிப்பு
திரவுபதியம்மன் கோவிலில் 12,000 பக்தர்கள் தீமிதிப்பு
ADDED : மே 14, 2024 04:19 AM

திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, 12,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவு அடைந்தது.
திருத்தணி அடுத்த குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி விழா துவங்கியது. நேற்று கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
இதில், அர்ச்சுனன் பனை மரத்தில் ஏறி அமர்ந்து தவம் புரிந்தார். அப்போது, ஏழு கருட பறவைகள் தபசு மரத்தை சுற்றி வலம் வந்தது. வரும், 19ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடைபெறுகிறது. 20ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.
l ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பகாசூரன் கும்பம் படைக்கப்பட்டது. பகாசூரன் வேடம் அணிந்த பக்தர், மாட்டு வண்டியில் வீதியுலா வந்தார்.
அவருக்கு, பக்தர்கள் வீடுதோறும் கும்பம் படைத்தனர். நேற்று மாலை கோவில் வளாகத்தில் திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

