/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் அடிபட்டு 2 பசு மாடுகள் பலி
/
ரயிலில் அடிபட்டு 2 பசு மாடுகள் பலி
ADDED : செப் 17, 2024 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது மணவூர் ரயில் நிலையம்.
இங்கு, மணவூர், குப்பம்கண்டிகை, மருதவல்லிபுரம் உள்ளிட்ட ரயில் தண்டவாளத்தை ஒட்டிய கிராம பகுதிகளில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
நேற்று அதிகாலை மணவூர் ரயில் நிலையம் அருகே, மேய்ச்சலில் இருந்த இரண்டு பசுக்கள் திடீரென தண்டவாளத்தை கடந்தது.
அப்போது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இரு பசு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.