/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னையின் 20 ஆண்டு வளர்ச்சி உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு 3வது முழுமை திட்டத்தில் விபரம் சேர்ப்பு

ADDED : மே 19, 2024 09:52 PM
சென்னை: சென்னை பெருநகருக்கான, 2வது முழுமை திட்டம் காலாவதியாகும் நிலையில் உள்ளது. இதனால், அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சர்வதேச நடைமுறை
இந்நிலையில், 3வது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகளை சி.எம்.டி.ஏ., 2021ல் அறிவித்தது. இதன் துவக்கமாக, 2046 வரையிலான காலத்தில், சென்னை பெருநகரின் தேவைகள் குறித்து பொது மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
இக்கருத்துகள் அடிப்படையில், சென்னை பெருநகருக்கான தொலை நோக்கு ஆவணம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் முழுமை திட்ட தயாரிப்பில் சர்வதேச நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதற்காக, சென்னை பெருநகரில் அடுத்த, 20 ஆண்டுகளில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மாற்றங்கள் குறித்தும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தனியார் கலந்தாலோசகர் வாயிலாக, இதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதி
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நடந்தது. இதில், பொருளாதார ஆய்வுக்கான தனியார் கலந்தாலோசகர் நிறுவன பிரதிநிதிகள், உலக வங்கி அதிகாரிகள் பங்கேற்றதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பெருநகரில் பாரம்பரியமான பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் அடுத்த, 20 ஆண்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதில் உத்தேசிக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளின் தேவைகள் மதிப்பிடப்படும்.
இது தொடர்பான புதிய திட்டங்கள், முழுமை திட்டத்தில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.