/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் தொகுதியில் 281 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை!: 6,521 மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
/
திருவள்ளூர் தொகுதியில் 281 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை!: 6,521 மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
திருவள்ளூர் தொகுதியில் 281 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை!: 6,521 மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
திருவள்ளூர் தொகுதியில் 281 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை!: 6,521 மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 01, 2024 11:14 PM
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், திருவள்ளூர் லோக்சபா தனி தொகுதியில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டபை தொகுதிகள்.
வடசென்னை தொகுதியில், திருவொற்றியூர், ஸ்ரீபெரும்புதுாரில் மதுரவாயல், அம்பத்துார், அரக்கோணம் லோக்சபா தொகுதியில் திருத்தணி ஆகிய சட்டசபை தொகுதிகள் வருகின்றன. மாவட்டம் முழுதும் உள்ள, 34,22,814 வாக்காளர்கள், 3,687 ஓட்டுச் சாவடிகளில் ஏப்.,19ல் ஓட்டுப் போட உள்ளனர்.
பழுது
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு ஓட்டுச் சாவடிக்கு தலா ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.
ஏதாவது இயந்திரம் பழுதாகி விட்டால் மாற்றுவதற்காக, 20 சதவீதம் கூடுதலாக மின்னணு இயந்திரம் இருப்பு வைக்க, 2,714 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே, போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த தொகுதியில் உள்ள, ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.
வடசென்னையில் 35, ஸ்ரீபெரும்புதுார் 31, அரக்கோணத்தில் 26 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், அங்கு முறையே, 3 மற்றும் தலா 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேற்கண்ட சட்டசபை தொகுதி வாரியாக, 1,431 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான, 3,807 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
குலுக்கல் முறையில்
திருவள்ளூர் லோக்சபா தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தார்.
அனைத்து அரசியல் கட்சி முகவர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, சட்டபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
பின், அனைத்து இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
கண்காணிப்பு கேமரா
திருவள்ளூர் மாவட்டத்தில், 281 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவை எனவும், 6 ஓட்டு சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஓட்டுச் சாவடிகளில் நடைபெறும் ஓட்டுப்பதிவு அனைத்தும் கண்காணிப்பு கேமரா வாயிலாக பதிவு செய்யப்பட்டும்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் நேற்று முன்தினம், திருப்பாச்சூர், திருவள்ளூர், கடம்பத்துார் பகுதிகளில் உள்ள, பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

