/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அமைச்சர் பங்கேற்ற விழாவில் மயங்கி விழுந்த 3 மாணவர்கள்
/
அமைச்சர் பங்கேற்ற விழாவில் மயங்கி விழுந்த 3 மாணவர்கள்
அமைச்சர் பங்கேற்ற விழாவில் மயங்கி விழுந்த 3 மாணவர்கள்
அமைச்சர் பங்கேற்ற விழாவில் மயங்கி விழுந்த 3 மாணவர்கள்
ADDED : ஆக 13, 2024 07:13 AM

திருத்தணி: திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்தான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். இதில் கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, காணொலி மூலம் போதையில்லா தமிழகம் உருவாக்குவோம் என உறுதி மொழி ஏற்றதை தொடர்ந்து அமைச்சர் காந்தி முன்னிலையில் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்கள் என, 500க்கும் மேற்பட்டோரை பள்ளி மைதானத்தில் காலை, 9:45 மணிக்கே நிற்க வைக்கப்பட்டனர்.
காலை, 10:30 மணிக்கு மேல் துவங்கியதால் வெயில் கொளுத்தியதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் அமைச்சர் முன்பே திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக ஆசிரியர்கள் மூன்று மாணவர்களை மீட்டு பள்ளி வகுப்பறையில் அமர வைத்து, அவர்களுக்கு குளிர்பானம், பிஸ்கட் வழங்கினர்.

