/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தையை தாக்கியவருக்கு மண்டை உடைப்பு
/
குழந்தையை தாக்கியவருக்கு மண்டை உடைப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:43 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்தவர் சதீஷ், 30. இவரது மகன் தஜ்வின், 5. கடந்த 30ம் தேதி தஜ்வின் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அருண், 25, என்பவர், குழந்தையை செங்கல்லால் அடித்துள்ளார். இதில், குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த சதீஷ், இரும்பு ராடால் அருண் தலையில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதில், பலத்த காயமடைந்த அருண், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, இரு தரப்பினரும் நேற்று புகார் அளித்தனர். புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷை கைது செய்தனர். மேலும், அருண் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.