/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய இணைப்பு சாலை
/
வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய இணைப்பு சாலை
ADDED : ஆக 23, 2024 02:44 AM

திருவள்ளூர்,:சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பார்க்கிங் ஏரியாவாக மாறி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த அதிவிரைவு நெடுஞ்சாலையில் இருபுறமும் இணைப்பு சாலைகள் உள்ளன.
இந்த இணைப்பு சாலையை ஒட்டி ஏராளமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்த வழியாக தினசரி, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
அந்த இணைப்பு சாலை தற்போது குப்பை கொட்டும் இடமாகவும் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறி வருகிறது.
இதனால் இணைப்பு சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இணைப்பு சாலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.