/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை கிடங்காக மாறும் இணைப்பு சாலை
/
குப்பை கிடங்காக மாறும் இணைப்பு சாலை
ADDED : ஜூலை 08, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: சென்னை - பெங்களூர் அதிவிரைவு நெடுஞ்சாலையில் திருமழிசை அடுத்துள்ளது குத்தம்பாக்கம்.
இப்பகுதியில் உள்ள இணைப்பு சாலை பகுதியில் குப்பை சேகரமாகி குப்பை கிடங்காக மாறி வருகிறது.
இதனால் இப்பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, குப்பை கிடங்காக மாறிவரும் இணைப்பு சாலையை சீரமைக்கவும் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.