/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் ரூ.550 பறித்தவர் கைது
/
மீஞ்சூரில் ரூ.550 பறித்தவர் கைது
ADDED : ஆக 18, 2024 11:08 PM
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவர் பெரியமுல்லைவாயல் டோல்கேட் பகுதியில், பஞ்சர் கடை வைத்து உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, பணிமுடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக மீஞ்சூர் ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார்.
ரயில் நிலையம் அருகே செல்லும்போது, மர்ம நபர் ஒருவர் மணிகண்டனை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த, 550 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினார்.
இது குறித்து மணிகண்டன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான காட்சிகளை கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்ட, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ராகுல்டேவிட், 24, என்பவரை கைது செய்தனர்.