/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளக்கணாம்பூடியில் படித்துறை இல்லாத குளம்
/
விளக்கணாம்பூடியில் படித்துறை இல்லாத குளம்
ADDED : ஆக 24, 2024 01:10 AM

ஆர்.கே.பேட்டை:விளக்கணாம்பூடி கிராமத்தின் மேற்கில், காந்தகிரி மலையடிவாரத்தில் குளம் ஒன்று அமைந்துள்ளது. காந்தகிரி மலையில் இருந்து பாயும் மழைநீர் முழுவதும், இந்த குளத்திற்கு வந்தடைகிறது.
மழைநீர் மட்டும் இன்றி ஊற்று நீராகவும் காந்தகிரியில் இருந்து இந்த குளத்திற்கு நீர்வரத்து உள்ளது. இதனால், இந்த குளம் எந்தநாளும் வற்றாமல் வளமாக காணப்படுகிறது.
இதில், தாமரை மலர்கள் ஏராளமாக பூத்து குலுங்குகின்றன. காந்தகிரி மலையும், இந்த குளமும் கிராமத்தின் வளத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்த குளத்திற்கு கிழக்கில் மட்டும், 10 அடி அகலத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்ணால் அமைந்துள்ள குளக்கரை நாளடைவில் மழைநீர் கரைந்து சிதைந்து விடுகின்றன. மேலும், புதர் மண்டி பொலிவிழந்து காணப்படுகிறது.
குளத்தின் நான்கு பக்கமும் கரைகளை வலுபடுத்தி படித்துறை அமைக்க வேண்டும். நடைபாதை வசதியும் ஏற்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.