ADDED : செப் 13, 2024 07:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்:சென்னை, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன், 30; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று பணி தொடர்பாக மீஞ்சூருக்கு, பொன்னேரி - திருவொற்றியூர் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மீஞ்சூர் பஜார் அருகே செல்லும்போது, திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அதே நேரம் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஹரிஹரன் மீது மோதியது.
இதில், ஹரிஹரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி இறந்தார். விபத்து தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.