
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜாம்பஜார்: திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 42. கடந்த, 2022ம் ஆண்டு ஆக, 16ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அருண், 26, என்பவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறையிலிருந்து அருண் பிணையில் வெளியே வந்தார்.
பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அருணை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. தலைமறைவான அருணை நேற்று ஜாம்பஜார் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.