/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏப்.,19ல் விடுப்பு அளிக்காத நிறுவனம் மீது நடவடிக்கை
/
ஏப்.,19ல் விடுப்பு அளிக்காத நிறுவனம் மீது நடவடிக்கை
ஏப்.,19ல் விடுப்பு அளிக்காத நிறுவனம் மீது நடவடிக்கை
ஏப்.,19ல் விடுப்பு அளிக்காத நிறுவனம் மீது நடவடிக்கை
ADDED : ஏப் 10, 2024 12:29 AM
திருவள்ளூர்,
தேர்தல் தேதியான ஏப்.,19ல் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஏப்.,19ல் பொது விடுப்பு அளிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து புகார் இருப்பின், தொழிலாளர் கட்டுப்பாட்டு அறைக்கு, திருவள்ளூர், தொழிலாளர் உதவி ஆணையர்- 72990 07334, தொழிலாளர் துணை ஆய்வாளர்- திருவள்ளூர், 97910 78512, தொழிலாளர் துணை ஆய்வாளர் - திருவொற்றியூர் 94440 17083 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

