/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிக்னல்லில் விளம்பர பதாகை வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
சிக்னல்லில் விளம்பர பதாகை வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
சிக்னல்லில் விளம்பர பதாகை வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
சிக்னல்லில் விளம்பர பதாகை வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : செப் 07, 2024 07:34 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களில் தனியார் விளம்பர பதாகைகளால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தலைநகராக திகழ்வதுடன், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பெங்களூரு-கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மையமாக திகழ்கிறது. இந்த நகர் வழியாக தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.
திருவள்ளூர் நகரில், டோல்கேட், எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாகம், நேதாஜிசாலை-சி.வி.நாயுடு சாலை சந்திப்பு, காமராஜர் சாலை.
ஜே.என்.சாலை சந்திப்பு, ஜே.என்.சாலை-ராஜாஜி சாலை, ஆவடி புறவழிச்சாலை, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை; பெரியகுப்பம்-மணவாளநகர் சாலை சந்திப்பு, தேரடி-செங்குன்றம் சாலை சந்திப்பு என, 20 இடங்களில் தானியங்கி போக்குவரத்து 'சிக்னல்' அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்னல்கள் முறையான பராமரிப்பு இன்றி இயங்காமல் உள்ளது ஒரு புறம் இருந்தாலும், அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், திருவள்ளூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள 'சிக்னல்'களின் மேற்புறம் தனியார் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பர பதாகைகள் மழை காலத்திலும், பலத்த காற்று வீசும் நேரத்திலும், வேகமாக ஆடுவதால், எந்த நேரத்திலும் அந்த பதாகைகள் கீழை விழும் அபாயம் உள்ளது.
'சிக்னல்'களில் சிவப்பு விளக்கு எரியும்போது நிற்கும் வாகன ஓட்டிகள் மீது, பலத்த காற்று வீசும்போது அந்த விளம்ப பதாகைகள் விழுந்தால் பலத்த சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலையோரம் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் உள்ள விளம்பர பதாகை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவற்றை அகற்றாத காவல் துறையினர், 'சிக்னல்'கள் மேல் தொங்கும் விளம்பர பதாகைகளால் விபத்து அபாயம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விபத்திற்கு வழிவகுக்கும் விளம்பர பதாகை மற்றும், 'சிக்னல்''களில் தொங்கும் வகையில் அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகளையும் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.