/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெப்பத்தால் தீ விபத்து தடுக்க ஆலோசனை
/
வெப்பத்தால் தீ விபத்து தடுக்க ஆலோசனை
ADDED : மே 03, 2024 11:46 PM
திருவள்ளூர்:அதிக வெப்பத்தால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாவட்டத்தில் வெடி விபத்து ஏதும் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரி மற்றும் பட்டாசு உற்பத்தி மையங்களை ஆய்வு மேற்கொள்ள, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆவடி காவல் துணை கமிஷனர் ஜமீன் ஜமால், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க துணை இயக்குனர் ஹேமலதா, சுகாதார இணை இயக்குனர் மீரா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.