/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாரம்பரிய நெல் ரகம் பயிரிட வேளாண் துறை அறிவுரை
/
பாரம்பரிய நெல் ரகம் பயிரிட வேளாண் துறை அறிவுரை
ADDED : ஆக 10, 2024 10:58 PM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வாழ்கின்றனர். அதிகளவில் விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர்.
இந்நிலையில் வேளாண் துறையினர், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் மானிய விலையில் விதைநெல் வழங்கப்படுகிறது என விவசாயிகளிடம் வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருத்தணி வேளாண் துறை பொறுப்பு உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:
தற்போது சம்பா நெல் பருவத்தில், பாரம்பரிய நெல் ரகங்களான துாய மல்லி, சீரக சம்பா, சீவன் சம்பா ஆகிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகள் முன்வரவேண்டும்.
இந்த ரக நெல் பயிரிட்டால் பூச்சி நோய் தாக்குதல் குறைவு, உரச் செலவுகள் குறைவு, இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஏற்ற நெல் ரகங்கள்.
இந்த நெல் ரகங்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, விதைநெல், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், ஏ.டி.டி., 54, ஏ.டி.டி., 37 ஆகிய நெல்விதைகளும், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் உயிர் உரங்கள் மற்றும் ஜிப்சம் போன்றவையும், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
நெல்விதைகள் உயிர் உரங்கள் பெற விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கணினி அடங்கல், சிட்டா ஆகியவற்றுடன் திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகையில் இயங்கி வரும் வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.