/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
கோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 22, 2024 06:37 PM
திருவள்ளூர்:கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், காலியாக உள்ள 17 கோவில் பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
தொகுப்பூதியமாக மாதம் 7,500 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பதாரர், பணியின் போது எவ்வித குற்ற நிகழ்வு காரணமாக பணிநீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் பெற்றிருத்தல் கூடாது.
முன்னாள் ராணுவத்தினர் வயது 60க்குள் இருக்க வேண்டும். தகுதி வாய்ந்தோர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆதார், பணி ஓய்வு சான்றிதழ், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன், வரும், செப்.20க்குள் மாவட்ட காவல் அலுவலக தபால் பிரிவில், நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.