/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் விழாவில் தகராறு 3 பேர் கைது
/
கோவில் விழாவில் தகராறு 3 பேர் கைது
ADDED : மே 01, 2024 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த ரங்கைய்ய பள்ளி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு கோனேட்டம்பேட்டையை சேர்ந்த சேகர், 22, லோகேஷ், 22, பிரவீன், 22, சோமு, 22, ஆகியோர், ரங்கைய்ய பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் வீட்டிற்கு, மது போதையில் வந்துள்ளனர்.
வெங்கடேஷிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், வெங்கடேஷ் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து, வெங்கடேஷ் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
எதிர் தரப்பினரும், தங்களிடம் புகார் அளித்தனர். இருதரப்பு புகாரின்படி சேகர், வெங்கடேசன், ராஜி என, மூன்று பேரை கைது செய்தனர்.

