/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது
/
வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது
ADDED : ஆக 06, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, தாமரைப்பாக்கம் ஊராட்சி, பூசாலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோனியா, 26. இவர் தன் தோட்டத்தில் வாழை மரங்களை வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம், 55. இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் சண்முகம், சோனியாவின் தோட்டத்திற்கு சென்று அங்கு வளர்ந்திருந்த, 15 வாழை மரங்களை வெட்டி சாய்தார். இதுகுறித்து சோனியா, கொடுத்த புகாரின்படி வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, சண்முகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.