ADDED : பிப் 22, 2025 10:43 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர் காலாண்டு கூட்டம் நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று, கலெக்டர் பிரதாப் தலைமையில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் காலாண்டு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில். நபார்டு மற்றும் அனைத்து வங்கியின் வாயிலாக 2025 - 26ம் ஆண்டுகான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை இலக்கு மற்றும் சாதனைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடன் உதவி இலக்கு; மாவட்ட தொழில் மைய சார்பில் நீட்ஸ், அம்பேத்கர் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்தும், கலெக்டர் கேட்டறிந்தார்.
முன்னாள் படை வீரர் சார்பில், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 'டாம்கோ' திட்ட பணிகள் குறித்தும், விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சிவமலர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.