/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதரில் மருத்துவமனை சுற்றுச்சுவர் விழிப்புணர்வு வாசகம் எழுதலாமே!
/
புதரில் மருத்துவமனை சுற்றுச்சுவர் விழிப்புணர்வு வாசகம் எழுதலாமே!
புதரில் மருத்துவமனை சுற்றுச்சுவர் விழிப்புணர்வு வாசகம் எழுதலாமே!
புதரில் மருத்துவமனை சுற்றுச்சுவர் விழிப்புணர்வு வாசகம் எழுதலாமே!
ADDED : மார் 02, 2025 11:41 PM

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு நகரில் இருந்து நகரி செல்லும் சாலையில், கோனேட்டம்பேட்டையில் அமைந்துள்ளது, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை.
பள்ளிப்பட்டு பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள், இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர்.
இதுதவிர ஆந்திர மாநிலம், நகரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் செடி, கொடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது.
நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு மருத்துவமனையை அடையாளம் காண்பதே சிரமமாக உள்ளது.
மருத்துவமனை நுழைவாயில் பகுதியை சீரமைக்கவும், முன்பக்க சுற்றுச்சுவரில் சுகாதார திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் எழுதி வைக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.