/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காரை வாடகைக்கு எடுத்து ஏமாற்றி மிரட்டிய மூவர் மீது வழக்கு
/
காரை வாடகைக்கு எடுத்து ஏமாற்றி மிரட்டிய மூவர் மீது வழக்கு
காரை வாடகைக்கு எடுத்து ஏமாற்றி மிரட்டிய மூவர் மீது வழக்கு
காரை வாடகைக்கு எடுத்து ஏமாற்றி மிரட்டிய மூவர் மீது வழக்கு
ADDED : பிப் 23, 2025 08:05 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 34; இவருக்கு, திருமணத்தின் போது, சீர்வரிசையாக கொடுக்கப்பட்ட, 'டாடா அல்ட்ரான்ஸ்' காரை உறவினர் விமல்குமார் என்பவரின் நண்பரான செ்னனை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கட், 27, என்பவருக்கு, 2022ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 20ம் தேதி வாடகைக்கு கொடுத்துள்ளார்.
அதன்பின் வாடகை மற்றும் வாகனத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு, வசந்தகுமாருக்கு, வெங்கட் போன் செய்து, காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்யா உணவகத்திற்கு வரும் படி அழைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற வசந்தகுமாரிடம், வெங்கட், 27, அயனாவரம் விமல்குமார், 38 மற்றும் ஆகிய இருவரும் சேர்ந்து, உன் காரை நீலாங்கரையைச் சேர்ந்த சந்துரு, 38 என்பவருக்கு விற்பனை செய்து விட்டோம் என தெரிவித்தனர்.
பின், இதுகுறித்து சந்துரு என்பவரிடம் வசந்தகுமார் மொபைல்போனில் பேசிய போது, காரை தர முடியாது என, ஆபாசமாக பேசியுள்ளார்.
பின், வெங்கட், விமல்குமார் ஆகிய இருவரும் வசந்தகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து வசந்தகுமார், நேற்று முன்தினம் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வெங்கட், விமல்குமார், சந்துரு ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.